தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன், போகர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகளுக்கு அப்பகுதிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர்கள் எஸ்.ராஜகோபால், ஆர்.பிறையா ஆகியோர் இணைந்து இப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பிராதுக்காரன்பட்டி மற்றும் ரோசனப்பட்டி கிராமங்களுக்கு இடையே 13 ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுப்பிடித்தனர்.இதுகுறித்து உதவி பேராசிரியர் ஆர்.பிறையா கூறியது, இந்த கல்வெட்டு நான்கு அடி நீலமும், ஓரு அடி அகலமும் கொண்டது. இதில் முழுமையடையாத ஏழு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் சி.சாந்தலிங்கம் உதவியுடன் அதில் உள்ள எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி அதில் உள்ள எழுத்துக்கள் அப்பகுதியை ஆண்ட சிறிய தலைவனான கிளாங்குடி தேவர் தொண்டைமான் என்பவருக்கு திருப்புவன்கோன் அங்கராயன் என்ற குடிமகன் வழங்கிய பரிசு பற்றி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இதுபோன்ற கல்வெட்டுகள் அதிகளவில் இருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியது, இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே பழங்கால கற்சிலைகள் கேட்பாரின்றி கிடக்கிறது. இதில் சில தமிழ் கல்வெட்டுகளும் உள்ளது. இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பழங்கால சிலைகள் மற்றும் பழங்கால மக்களின் வாழ்விடம் குறித்த தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோன் என்றால் அரசனை குறிக்கும் தமிழ் சொல்அது உண்மையான இருப்பினும் இந்த கல்வெட்டில் அரசர் குறிப்பிடும் அரசர் கிடையது நாட்டின் குடிமகன் இதன் முலம் தெரிவது கோன் என்றா பட்டம் முல்லை நிலம் தமிழர்கள் குறிக்கும் சொல்
திருமலை பாறை ஓவியங்கள், தமிழி எழுத்துகள்கோன் சிறப்பிக்கா முல்லை நிலம் தமிழர்கள் அடையாளம் தமிழ் பிராமி கல்வெட்டு
திருமலை பாறை ஓவியங்கள், தமிழி எழுத்துகள்கோன் சிறப்பிக்கா முல்லை நிலம் தமிழர்கள் அடையாளம் தமிழ் பிராமி கல்வெட்டு தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக பதிய பட்ட கல்வெட்டு… 2 விடயம் குறிப்பிட பட்டு இருக்கிறது.. 1) குகை ஓவியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல் ஓவியம் 2) வது “காவிதி கொன்” என்பவருக்கு படுக்கை அமைக்க பட்டது என்று எழுதப்பட்டதாக பதிய பட்டு உள்ளது.. கோன் என்ற அந்த பெயர் முல்லை நிலம் தமிழர்கள் தான் ,சிவகங்கை மாவட்டம் திருமலைக் குடைவரைக்கு மேலுள்ள குகைத் தளத்தில் தொல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களும் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.மலையின் வடக்குப் பகுதியிலமைந்த இரு குகைகளிலும் கிபி முதல் நூற்றாண்டளவினதாகக் கருதப்படும் இரு பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டு முழுவதுமாகவும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் படிக்கப்பட்டுள்ளன.கல்வெட்டு 1 : எருக்காட்டு ஊரு காவிதி கோன் கொறிய் பளிய்கல்வெட்டு 2 : வாகாரண்டைஇரு கல்வெட்டுகளுமே இன்று நன்னிலையில் இல்லாது தற்காலப் பூச்சுகளில் சிக்கி அழியுந் தருவாயில் உள்ளது. மலையின் தென்புறத்தே செந்நிறப் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றனபழமையான திருமலை கோயில், பாறை ஓவியங்கள் அழியும் அபாயம்: சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. ல் உள்ளது திருமலைக் கிராமம். இக்கிராமத்தில் உள்ள மலையில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள், கி.மு. முதல் நூற்றாண்டைச் சோ்ந்த 2 பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு இயற்கையாக அமைந்த குகையில் சமணத் துறவியா் தங்குவதற்கு ஏதுவாக கல் படுக்கைகள் உள்ளன.படுக்கை செதுக்கப்பட்டுள்ள குகைக்குள் மழைநீர் செல்லாதபடி பாறையின் மேற்புறம் தடுப்பு செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மலையில் 8-ம் நூற்றாண்டு முற்காலப் பாண்டியரின் குடை வரைக் கோயில்,
13-ம் நூற்றாண்டு பிற்காலப் பாண்டியரின் கட்டுமானக் கோயில் உள்ளன. குடைவரைக் கோயிலில் சிவன், மீனாட்சி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர்.கட்டுமானக் கோயிலில் பாகம்பிரியாள் அம்மனுடன் மலைக்கொழுந்தீஸ்வரர் காட்சி அளிக்கிறார். மேலும் கோயிலைச் சுற்றிலும் மலையில் 8 சுனைகள் உள்ளன. மேற்புறம் உள்ள பெரிய சுனையில் நீர் எப்போதும் வற்றாது. இப்பகுதி தமிழகத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பழமை வாய்ந்த கோயில்கள், பாறை ஓவியங்கள் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு களை தமிழகம் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் பார்வையிட்டு செல்கின்றனர்.அங்குள்ள பாறை ஓவியங் களையும், கல்வெட்டுகளையும் சிலர் சேதப்படுத்தி வருகின்றனா். இதனை தொல்லியல்துறை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் #இடையர்விழுதுகள் #கோனார்_கொற்றம்