Your city's News

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

நடுகல் வழிபாடு எனப் பார்க்கின்ற போது சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன், சோழன் ஆகியோர்களுக்கு நடுகல் இருந்ததாக நாம் பாடல்களின் மூலம் அறிந்து கொள்கின்றோம். அதே போல் ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றது. புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியப் பாடல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் உண்டு.

நடுகல் மீது மயில் இறகு கொண்டு அலங்கரித்தல், கள் ஊற்றுதல், ஆடுகளை துடி அடித்து பலி கொடுத்தல் எனும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் ஈழத்தில் இறந்த மாவீரர்களுக்கு நடப்பட்ட நடுகல் வணக்கத்தை நாம் பார்க்கின்றோம்.

புறநானூற்றுப் பாடல் 335 இல் மாங்குடி கிழார் எழுதியப் பாடலின் மூலம் நடுகல் சிறப்பை அறிந்துகொள்ள முடியும்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335

ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.

அதே போன்று கோப்பெருஞ்சோழன் இறந்தபின் அவனுடைய நண்பரான பொத்தியார் அவனை நினைத்து வருந்திப்பாடுவதாக புறநானூற்றுப் பாடல் 221 இன் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221)
நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடையவன் நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார்.

மலைபடுகடாம் எனும் ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் மற்றொரு பாணரை அரசனை கண்டு பரிசில் பெற ஆற்றுப்படுத்துவார், அதில் வழி நெடுக நடுகல் இருக்கும் எனும் அடையாளத்தைக் கூறி வழி கூறுவார்.

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில். உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுதொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துவதாக அந்தப் பாடலில் குறிப்புகள் காணப்பெறுகின்றது.

அதே போன்று ஐங்குறுநூற்றில், ஓதலாந்தையார் எனும் புலவர் யானையின் தும்பிக்கையின் சொர சொரப்பை எழுத்துகள் பொறித்த நடுகல்லோடு ஒப்பிடுகின்றார்.
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை (ஐங்குறுநூறு 352)
அகநானூற்றுப் பாடல் 343 இல் மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் இருக்கும் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்(அகநானூறு 343)

வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம்

அழிவை நோக்கியுள்ள புகளூர் கல்வெட்டுகள் சங்காலம் கோனார் கல்வெட்டு ஆதரம் கல்வெட்டுகள் பழங்கால வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக உள்ளன. இதற்குக் காரணம் கல்வெட்டுகளில் இடைச்செருகல்கள் இருக்க இயலாது என்பதே. சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுக்கையில் உள்ளது உள்ளபடி எனும் அளவிற்கு முழுமையான தகவல்கள் கிடைத்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால், கல்வெட்டுகளோ காலங்காலமாக தன் மீது செதுக்கப்பட்ட செய்திகளைச் செவ்வெனே தாங்கி நிற்கிறது. சில சமயங்களில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மெய்ப்பிக்கவும், பழங்கால எழுத்து வடிவங்களை அறியவும் கல்வெட்டுகள் துணை நிற்கின்றன.கரூர் மாவட்டம் புகளூரில் உள்ளது புகழி மலை. ஆறுநாட்டார் மலை என்றும் அழைக்கப்படும் இம்மலையில் உச்சியில் தமிழ் கடவுளான குமரனுக்குக் கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு கீழே தமிழுக்குப் புகழ் சேர்க்கும் கி.பி 1-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்னிரண்டு தமிழ் தொல் எழுத்து (பிராமி) கல்வெட்டுகள் உள்ளன. இங்கு ஒரே வம்சாவழியைச் சேர்ந்த மூன்று சேர மன்னர்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகளும், பொன் மற்றும் துணி வணிகர்கள் பெயர் கொண்ட கல்வெட்டுகளும், சங்ககாலப் பெயர்களான கொற்றன், கீரன், பிட்டன், ஓரி போன்ற பெயர்கள் கொண்ட கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றுள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் காணப்படும் சேர மன்னர்கள் மூவரின் பெயர்கள் காணப்படுகின்ற கல்வெட்டு மிக முக்கியமான ஒன்று.கல்வெட்டுகள்: (படம்-1)மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன்கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் கடுங்கோன் ளங்கடுங்கோளங்கோ ஆக அறுத்த கல். இது ”ஆற்றூரைச் சேர்ந்த சமணப் பெரியவர் செங்காயபன் என்பவருக்கு சேர மன்னன் செல்லிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கடுங்கோன் இளவரசாக இருந்தபோது செதுக்கப்பட்ட கல்” என்ற செய்தியைக் காட்டும் கல்வெட்டு.” நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி”.இது ”நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி” என்பதைத் தெரிவிக்கும் கல்வெட்டு. இவ்விதம் ஒவ்வொரு சமணப்படுகையின் பக்கவாட்டிலும், அதனை வழங்கியவரின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது.சமணப்படுகைகள் மழைச்சாரலில் நனையாமல் இருக்க படுகை அமைக்கப்பட்டுள்ள குகைகளின் விளிம்பில் முற்றமும் (படம்-2) மலையின் பின்பக்கமுள்ள சமணப்படுகைகளை அடைய சிறு நடைப்பாதையும்(படம்-6) செதுக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்த, சமணர்களின் பாதுகாப்பிற்காக செதுக்கப்பட்ட படுகைகள்(படம்-5) இன்று பாதுகாப்பின்றி அழிவை நோக்கியுள்ளன. காலத்தால் அழியாத கல்வெட்டுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் அழிக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதுவே மக்களின் விழிப்புணர்வின்மை. இந்த சக்தியின் தாக்கத்திற்கு புகழி மலையும் உள்ளாகி வருகிறது. மலையின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் உள்ள சமணப்படுகைகளுக்கு இட்டுச்செல்லும் வழி நெடுக இரும்பு வேலி போடப்பட்டுள்ளது, இந்த பாதுகாப்பு மட்டும் போதாது என்று நினைத்த மக்கள், சமீபத்தில் நடந்து முடிந்த கோவில் விழாவின்போது பிரசாதம் வழங்கப் பயன்படுத்தப்பட்ட தட்டுகளைக் குப்பையாய் குவித்துள்ளனர்.

கல்வெட்டுகளிலுள்ள சமணத்துறவிகளின் பெயர்களோடு, மக்கள் தங்கள் வருகையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தங்களது பெயர்களையும் செதுக்கியுள்ளனர் (படம்-3,4). இதனால் எதிர்காலத்தில் கல்வெட்டுகள் முற்றிலுமாக படிக்க இயலாத நிலையை அடைந்துவிடும். இதனால் அக்கல்வெட்டுகளில் உள்ள வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்காமலே போய்விடும். இச்சமணப்படுகைக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதன் வாயிலாக தங்கள் ஊர் சிறப்படையும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்தால் மட்டுமே அழிவுகளில் இருந்து கல்வெட்டுகளையும், அது வெளிப்படுத்தும் சிறப்புகளையும் காக்க இயலும். புதைந்திருக்கும் புராதானச் சின்னங்களை வெளிப்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதும் அவசியம் என்பதை யாவரும் உணரவேண்டும். இல்லையென்றால் நம் முன்னோரினை, அவர்களது சிறப்பினை அறிய நமக்கு கிடைத்த அரிய சான்றுகள் நம் எதிர்காலச் சந்ததியினருக்குக் கிட்டாமலே போய்விடும். #இடையர்விழுதுகள்#கோனார்கொற்றம்

ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர்

பாண்டியர்கள் யார்?

பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை என்று புத்தகங்களை எழுதி நூலகத்தை நிரப்பிவிட்டார்கள்.

முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

“மலிதிரை யூர்ந்து தன் மண்கடல்  வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப்  புகழ்  பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்”.

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது  தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது “மீன்” கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்.

“The pandiyas built their pedigree much later,for an inscription of A.D. 1141 one of first of it’s kind-traces their origin to mangayan or adiyadudevan of the from whom sprang pandiyas”.

                                                                                        -Prof William Coehlo

மற்றோர் இலக்கியச் சான்று

ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் ஆயர் என்பதனை விளக்குகிறார்.

“கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
 வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
 பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்”.

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு  வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.

கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.

மற்றோர் சரித்திர அதாரம் கூறுகின்றது

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல்  குமரி  வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.

4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை  கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

“All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers”

                                                                                                -nilakanta sasthiri.

அனால் கோனார்கள் பாண்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் என்று இதுவரையும் சொல்லி கொண்டதுமில்லை. இப்படி தற்பெருமை கொள்வது ஆயர்களின் வழக்கமில்லை இபொழுது அவர்கள் தங்கள் வரலாற்றை மறந்து கொண்டு இருப்பதால் சொல்லி தான் அக வேண்டும். பாண்டிய மன்னர்கள் ஆயர்குலத்தவர் இது தான் உண்மை வரலாறு.

நானும் பாண்டியர் வரலாறு என்று இருக்கும் அனைத்து ஆய்ஓளர்கள் எழுதிய நூலையும் படித்துவிட்டேன்.

அதில் இருக்கும் வரலாறு இல்லாத ஒன்றை புகுத்திய வரலராகவே உள்ளது .இல்லாத ஒன்றை இன்னார் சமூகம் என்று இருக்கும்.

இலக்கியத்தில் இருந்து சமூகம் சார்ந்த பல குறிப்புகள் இருக்கும் ஆனால் #ஆயர்கள் என்று வரும்போது மட்டும் அந்த பாடல் இருக்காது. 100% இப்படி தான் இருக்கு ஆய ஓளர்கள் என்று சுயசாதி பற்றோடுத்தான் எழுதுகின்றனர்.
உதாரணமாக சங்க இலக்கிய கலித்தொகை முல்லைகலியில் பாண்டியன் யார் தெளிவாக இருக்கும் இன்னும் சொல்ல போனால் கலித்தொகை 104 வரும் பாடல்..

“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்”

இந்த பாடல் பாண்டியர் வரலாற்று எல்லா புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கும். ஆனால் மீதி இருக்கும் ஒற்றை வரியை மட்டும் விட்டுவிடுவர் காரணம். இது பாண்டியர் தோற்றம் எப்போ ஆயர்,பாண்டியர் யார் என்று இருக்கும்…

இன்னும் சொல்ல போனால் முதல் மூத்த திணைகளனா குறிஞ்சி,முல்லை இருவர் மட்டுமே #பாண்டியரை உரிமை கொண்டாட உரிமை உள்ளவர்.. அந்த மீதி ஒற்றை வரி

“‘தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர்”‘

ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் இந்த ஒற்றை வரியை மறுத்தே பல கதைகள் அரங்கேறுகிறது.

ஆயனின் செங்கோல் சிறப்பு

மக்களை வழிநடத்தும் ஆயன் கோப்பெருஞ்சோழன்

கோப்பெருஞ்சோழன் எப்படிப்பட்டவன்?

புறநானூறு பாடல் விவரிக்கிறது 221-230 வரை

பாடுபவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொடுத்துப் பெற்ற புகழ்ஆடுபவர்களுக்களெல்லாம் கொடுத்துக் கொடுத்துப் பெற்ற அன்புஅறநெறி கண்டவர் புகழ்ந்த செங்கோல்திறனாளர்களெல்லாம் தேடிவந்து காட்டும் அன்புமகளிர் போன்ற மென்மைக் குணம்மைந்தர் போன்ற உடல் வலிமைகேள்வி என்னும் வேதநெறி மாந்தராகிய உயர்ந்தவர்களின் புகலிடம்

இப்படி விளங்கியவன் கோப்பெருஞ்சோழன்.

இத்தகையவன் என்று எண்ணிப்பார்க்காமல், வாழத் தகுதி வாய்ந்த ஒருவனைக் கூற்றுவன் கொண்டுசென்றான்.

அதனால் துன்புறும் உறவினர்ளே, 

உண்மை பேசும் வாயினை உடைய புலவர்களே, 

ஒன்று திரண்டு வாருங்கள். 

எல்லாரும் சேர்ந்து அந்தக் கூற்றுவனை வைதுத் தீர்க்கலாம். 

உலகமெல்லாம் ஒப்பாரி வைத்து அழும்படி (அரந்தை தூங்க) வைதுத் தீர்க்கலாம்.

கெடுதல் இல்லாத புகழைச் சூடிக்கொண்ட புரவலன் நடுகல்லாக இன்று ஆய்விட்டானே.

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;

ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;

அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;

திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;

மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;   5

துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;

அனையன் என்னாது, அத் தக்கோனை,

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;

பைதல் ஒக்கல் தழீஇ, அதனை

வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!           10

‘நனந் தலை உலகம் அரந்தை தூங்க,

கெடு இல் நல் இசை சூடி,

நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.

திணை பொதுவியல்; துறை கையறுநிலை.

கோப்பெருஞ்சோழன் நடுகல் கண்டு பொத்தியார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

புறநானூற்றில் ஆயர்கள்

புறநானூற்றில் ஆயர்கள்

சங்க இலக்கியமான புறநாற்றில் முல்லைநில மக்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள்

   புறம் -05
       “எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும! 

   விளக்கும் :-  எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!
  அதாவது கானகநாடன் என்பது முல்லைநில மக்களின் தலைவனை குறிக்கும்
காடும் காடு சார்ந்ததும் முல்லை நிலம் அகையால் கானகநாடன் என்கிற பெயரும் உண்டு
  இங்கே கானக நாடன் என்பது சேரனை குறிக்கிறது,

  சொற்பொருள்:-
         எருமை – எருமை மாடுகள், அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே
 புறநானூறு 5 பாடலில்  கூறுகிறது,

     புறம்-17
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா வீகைக் குடவர் கோவே.

  விளக்கம்:-   யானையின் மதநாற்றத்தை தேன் கொண்ட மலையெனக் கருதித் தங்கும் பெரிய பல யானைகளையும் மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால் கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது, நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய பாம்பின் தலை நடுங்க இடியைப் போல முழங்கும் முரசினையும் எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய குடவர் வேந்தே!
உடலுநர் உட்க வீங்கி – மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால்
கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது,

சொற்பொருள்:-
    கடு ஒடுங்கு எயிற்ற – நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய
அரவுத் தலை பனிப்ப – பாம்பின் தலை நடுங்க
இடியென முழங்கு முரசின் – இடியைப் போல முழங்கும் முரசினையும்
வரையா ஈகை – எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய
குடவர் கோவே – குடவர் வேந்தே!
குடவர் என்றாலும் இடையரை தான் குறிக்கும்
இங்கே  குடவர் என்று சேரனை தான் கூறிகிறார்கள்
  புறநானூறு பாடல் 17

   புறம் 54

       இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.
           
   விளக்கம் :-  சீழ்க்கை(விசில்) அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.
சேரன்  எதிரியின் நாட்டுக்கள் போகும் உவமைய கூறுகிறது,
        
  சொற்பொருள்
      மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய்
  இடையன் – ஆயன், 
சிறுதலை ஆயம் =  சிறிய தலையுடைய ஆடுகளின் கூட்டம்,. துஞ்சுதல் = தங்குதல்.

இடையனை பற்றி புறநானூறு 54 பாடலில் உள்ளது

   புறம் 215       கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை

   விளக்கம்:-  பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும்,  தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,  ஆயர்மகள்  சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்,

   சொற்பொருள்:- கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் – பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோறு,
தாதெரு மறுகின் – தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில்,
போதொடு பொதுளிய – மலர்களுடன் தழைத்த,
மொட்டுக்களுடன் தழைத்த,
 வேளை வெண் பூ – வேளையின் வெள்ளை மலர்கள்,
 வெண் தயிர் கொளீஇ – வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை – இடைமகள் சமைத்த அழகிய புளிக்கூழ்,
 அவரைக் கொய்யுநர் ஆர மாந்தும் – அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்,
   புறநானூறு 215 பாடலில் ஆய் மகளை பற்றிய பாடல் உள்ளது,

   புறம் – 221         பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
   அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;

விளக்கம்;- வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்;  செங்கோல் உடைய ஆயனே!; சான்றோர் புகழ்ந்த நெருங

நட்புடையவன்;
   
    சொற்பொருள்:- ஆய்கோல் =ஆயனின் செங்கோல்.  திறவோர் = சான்றோர்

என்று புறநானூறு 221 பாடலில்  ஆயனின் செங்கோல் புகழை கூறுகிறது

 நடுகல் வழிபாடு 

      புறம் -265      ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
      போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல் ஆன் கோவலர் படலை சூட்டக்,
  கல் ஆயினையே, கடு மான் தோன்றல், 

 விளக்கம்:-  ஊரை மிகவும் கடந்த, பாறைகள் நிறைந்த பாழிடத்தில், உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்களைப் பனை ஓலையால் அலங்கரித்துத் தொடுத்து, பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும் நடுகல் ஆகிவிட்டாயே நீ, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே,

    சொற்பொருள்:- ஊர் நனி இறந்த – ஊரை மிகவும் கடந்த, பார் முதிர் பறந்தலை – பாறைகள் நிறைந்த பாழிடம், ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்கள், போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து – பனை ஓலையால்  அலங்கரித்துத் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட – பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும்,
கல் ஆயினையே – நடுகல் ஆகிவிட்டாயே,
 கடு மான் தோன்றல் – விரைந்த குதிரைகளையுடைய தலைவனே,
   புறநானூறு 265 பாடலில் நடுகல் வழிபாடு பற்றிய இடையரை குறிக்கிறது

   புறம் 276          நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
     செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த,

  விளக்கம்:-  நரைத்து வெளிறிய தலை மயிரும், இரவமரத்தின் வித்தினைப் போல வற்றி உலர்ந்த கண்ணுடைய. தனங்களும் உடைய, சிறந்த பண்புடையா மூத்தகுடியில் பிறந்த முதுமை வாய்ந்த பெண்ணின் அன்பு செல்வன் எதிரியின் மிகப்பெரிய தோற்கச் செய்யும் போர்வீரனாக விளங்கினான். நிறைந்திருக்கும் பாலில் ஆய்மகள் தன் கை நகத்தால் தொட்டுத் தெரித்த மோர் உறை போர எதிரியின்

  சொற்பொருள்:-   நறுமை = நன்மை;
விரை = மணமுள்ள பொருள்;
துறந்த = நீங்கிய.
 காழ் = விதை;
 இரங்காழ் = இரவ மரத்தின் விதை;
திரங்குதல் = சுருங்குதல்;
 உலர்தல்;
வறு = வற்றிய.

மடம் = இளமை;
பால் = இயல்பு;
ஆய் = இடையர்;
வள் = வளம்;
 உகிர் = நகம்.
 உறை = பிரைமோர்
புறநானூறு 276 பாடலில் ஆயர் மகளீர் பற்றியும் பாடியுளனர்,

  புறம்-331        கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்ஏர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
     நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
     கல்லா  இடையன்  போலக் குறிப்பின்   

விளக்கம்:-இவன் கல்லையுடைத்துக் கட்டிய வலிய உவர்நீர் உள்ள கிணறும், வில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூருக்குத் தலைவன்; மிகுந்த வலிமையுடையவன். இவன் மிகவும் வறுமையுற்றால், குளிர் மிகுந்த, இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும் இடையன்,

       புறநானூறு 331 பாடலில் இடையனை பற்றி உள்ளது,

     புறம் -339      வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
   வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
      நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;

  விளக்கம் :-ஆனிரைகள் அகன்ற இடத்தில் புல்பூண்டுகளை உண்டி மரத்தடிநிழலில் அசையிட்டவாறே நின்றன. இடையர் முல்லைப் பூவை பறிக்க எறிந்த குறுங்கோலை கண்டு சிறிய முயல்கள் அஞ்சி அங்கே இருக்கும் நீர்நிலையில் வாளை மீன்களோடு துள்ளித் தாவி சென்ற
புறநானூறு 339 பாடலில் ஆயர்கள் பற்றியும்

  புறம்-388
நசைசால் தோன்றல்,
எ. ஊழி வாழி, பூழியர் பெருமகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்,
  விளக்கம்:-மனைப்பணியாளரும் களப்பணியாளரும் கனவென்று மயங்குமாறு நனவில் அளித்த அன்பு நிறைந்த தலைவன்; பூழியரின் தலைவன். சொரசொரப்புடைய துதிக்கையும் கொம்புமுடைய யானைகள் செய்யும் போரில் மேம்பட்ட வலிய முயற்சியுடைய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக்கூறிய அளவில்,
    நசைசால் = விருப்பமிக்க
  பூழியர் = இடையர்
  மருப்பு = கொம்பு.
        செரு = போர்.
பூழியர் என்று இந்த இடத்தில் பாண்டிய மன்னனை பாடியது பூழியர் என்றாலு இடையனை தான் குறிக்கும்

   சங்க இலக்கியமான புறநாற்றில் ஆயர்களும் ஆயர்கள் வாழ்ந்ததை பற்றியும் உள்ள தொகுப்பு

அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை

சங்க கால தமிழகத்தில் பல்வேறு குடியினர் பரவலாக வாழ்ந்து வந்திருந்ததை சங்கப் பாக்கள் மூலம் அறிகிறோம். இவர்களில் பஞ்வர், கவுரியர், குடவர், குட்டுவர், அதியர், உதியர், மலையர், மழவர், மறவர், இளையர், பூழியர்,  வில்லோர், கொங்கர், குறவர், பரதவர்,  கோசர், ஆவியர், ஓவியர், அருவர், அண்டர், இடையர், தொண்டர், திரையர், களவர், வடுகர், ஆரியர், மௌரியர், யவனர் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலே சுட்டப்பட்ட குடிகளில் அண்டர் குடியினர் பற்றி சங்க இலக்கியங்கள் சொற்பளவிலான குறிப்புகளையே தருகின்றன.
அண்டர்கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன் (கு.117:3-4)
அண்டர்கள் கட்டிய கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும் எருதைப்போல தோன்றும் துறைவன்’ என்றும்
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்பல்ஆ பயந்த நெய்யின் (கு.210:1-2)
கண்டீர நாட்டை ஆண்ட நள்ளியினது காட்டில் வாழ்கின்ற அண்டர்களின் பல பசுக்கள் தந்த நெய்யுடன்’ என்றும்
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்றுநாமமன்னர் துணிய நூறிக்கால்வல் புரவி அண்டர் ஓட்டி (ப.ப.88:7-9)
காற்றினைப் போல் விரைந்து செல்லும் குதிரைப்படை கொண்ட அண்டர்களை ஓட்டி’ என்றும் அண்டர்களைப் பற்றி சங்க பாக்கள் குறிப்புதருகின்றன.
அண்டர் என்னும் சொல் பொதுவாக பகைவர் எனப் பொருள்படும் அண்டார் என்னும் சொல்லின் திரிபாக இருக்கலாம்; அண்டர்களும் பொதுவர்களும் குறும்பர் எனப்பட்டனர் என்று துரை அரங்கசாமி குறிப்பிடுகிறார்.1 இவர்கள் ஆநிரைப் பேணும் ஆயர் தொழிலைச் செய்பவர்கள். இவர்களது தலைவன் கழுவுள் என்பவனாவான். இவரனது தலைநகரம் காமூர் என்பதாகும். இந்நகரம் தமிழகத்தின் வடவெல்லைக்கு வடக்கே, வட ஆரிய அரசுகளின் தெற்கெல்லைக்குத் தெற்கேயுள்ள இடைப்பட்ட பகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது.2
கழுவுள், பல குறுநில மன்னர்களைப் போரில் வென்றவனாவான். 14 வேளிர்களோடு போரிட்டான் என அகம் 135ஆம் பாடல் குறிப்பிடுகிறது. எருதுகளும் பசுக்களும் நிரம்ப உடைய கழுவுளின் வீரர்கள் புலவு நாற்றம் வீசும் தங்களுடைய வில்லைக் கொண்டு பகைப்புலத்திலிருந்து ஆநிரைகளைக் கவர்ந்து வருவார்கள் என்றும், இவனது நாட்டில் பாலும் தயிரும், ஆய மகளிர் தயிரினின்று எடுக்கும் வெண்ணெயும் நிரம்பியிருக்கும் என்றும், இவன் கடம்பர்களுடன் இணைந்து சேரமானோடு பொருதான் என்றும், போரில் சேரமான் இவனது ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டான் என்றும், சேரமானது வீரர்கள் இவனது நாட்டையும் தலைநகரத்தையும் பாழ்படுத்தினர் என்றும், ஆவின் பயனாகிய பாலும் தயிரும் கொண்டு செல்வச் செருக்குடன் இருந்த வாழ்ந்த மக்களையுடைய இவன், சேரமானோடு பொருதபின், எப்போதும் காலையில் கேட்கும் தயிர் கடையும் ஒலி இல்லாமல் போனதை எண்ணி எண்ணி வருந்தினான் என்றும், விருந்தினரை உபசரித்து வளமாக வாழ்ந்த இவனது நாட்டுமக்கள், தங்கள் செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு, பிறநாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அரிசில் கிழார் பதிற்றுப்பத்து எட்டாம்பத்தில் கூறுகிறார்.
இப்படி அண்டர்கள் குறித்துப் பயிலப்பட்டுள்ள செய்திகளின் மூலம் அண்டர்கள் கால்நடை மேய்க்கும் ஆயர் குடியினரின் ஒரு வகையினர் என்றும், அவர்கள் கழுவுள் என்பானின் கீழ் வாழ்ந்தனர் என்றும் பெறப்படுகிறது. போர் செய்யும் அளவிற்கு குதிரைப்படையைக் கொண்டிருந்த இவர்கள் யார், எப்போது இடம்பெயர்ந்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. இதுநிற்க. இனி ஆபீரர்கள் குறித்து காண்போம்.
ஆபிரர்கள்
ஆபீரர்கள் என்றொரு குழுவினர் புராதண இந்தியாவில் வாழ்ந்து வந்தனர். தற்போது அஹீர்கள் என்று வழங்கப்படும் இவர்களைப் பற்றியத் தகவல்களாவன,
ஆபிரர்களின் தோற்றம்
ஆபிரர்களின் தோற்றம், பரவல் குறித்து பலரும் பலவிதக் கருத்துக்களைத் தருகிறார்கள்.
‘ஆபிரர்கள் முதலில் பஞ்சாபில் வாழ்ந்து வந்தனர். பின் ராஜபுதனத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர் என்றும் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் அவர்கள் கீழைச் சிந்து சமவெளிக்கும் பின்னர் அங்கிருந்து மேற்குத் தக்காணத்திலுள்ள சௌராஷ்டிரம், அபராந் ஆகிய பகுதிகளுக்கும் சென்றடைந்தனர்’ என்றும் தேபால மித்ரா தன்னுடைய த அபிராஸ் அண்ட் தேர் காண்ட்டிரிபியூசன் டு த இந்தியன் கல்சர் எனும் நூலில் கூறியுள்ளார். டி.சி.சர்க்கார் அவர்களை ஹரீட்டிற்கும் காண்ட ஹாருக்கும் நடுவிலுள்ள அபிரவன் என்ற நாட்டுடன் தொடர்பு படுத்திப் பேசுகிறார். மேலும் அஸர்பெய்ஜான் எனும் இடத்திற்கருகில் வாழ்ந்து வந்த அபைரை என்ற மேய்ச்சல் நில மக்களே ஆபிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அவர்கள் வெளி நாட்டிலிருந்து தோன்றியவர்கள் என்ற கொள்கையை மிராஷியும் வேறு அறிஞர்களும் மறுத்து ஆபிரர்கள் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பஞ்சாபில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் என்பர்.பதஞ்சலி ஆபிரர்களை சூத்திர வருணத்தின் துணைச் சாதியர் எனக் குறிப்பிடுகின்றார்.3
புராதண இந்தியா  எனும் பழைய 56 தேசங்கள் என்ற நூலை எழுதிய பி.வி.ஜகதீச ஐயர் தரும் ஆபீரர்கள் பற்றி செய்திகளாவன,
ஆபீரதேசமானது ஸிந்து தேசத்திற்கு கிழக்கிலும் குந்தி (குந்தல) தேசங்களுக்கு நேர் மேற்கிலும் த்ரிகூட மலைக்கு வடக்கிலும் அகன்ற ஒரு பெரிய பூமியில் இருக்கிறது.
… இந்த தேசத்திற்கு மேற்கு எல்லையில் ஓடும் அந்த பெரிய ஸிந்து நதியே இதற்கு முக்கிய நதியாகும்.4
என்று கூறுகின்றார்.
மேலும் ‘புராண ஆபிரர்கள் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் என ரெஜினால்ட் எட்வர்ட் என்தோவன் எனும் பிரிட்டிஷ் அறிஞரும் கூறுகின்றார். அபைரா எனும் பழங்குடி மக்கள் மெசபடோமியாவிலிருந்து  நதியைக் கடந்து, இந்தியாவின் உட்பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற ஹக் நெவில் எனும் அறிஞரும் கருதுகின்றனர்.’5
மகாபாரதத்தில் மௌசால பருவம் அவர்கள் பஞ்சநதத்திற்கு அருகில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ‘அபீரியா என வழங்கப்பட்ட ஆபிரர் நாடு, சிந்துவெளிப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக டாலமி குறிப்பிடுகிறார்’.6
மேற்கண்ட சான்றுகளை எல்லாம் நோக்குமிடத்து, ஆபீரர்கள் என்ற பழங்குடி ஒன்று இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வெளியேயிருந்து வெகுகாலத்திற்கு முன்பே சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு பரவியிருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.
காலம்
பந்தர்க்கார், ஜெயஸ்வால் போன்ற அறிஞர்கள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் பரவினர் என்று குறிக்கினர். ஆனால் பதஞ்சலி முனிவர் இவர்களை ஆநிரவசிக (தூய்மையான) சூத்திரர்7 என்று பேசுவதால் இவரது காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே இவர்கள் வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. ‘கி.மு.3இல் ஆபிரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்’8 என்று ஜெயஸ்வாலும் சந்தேகிக்கிறார்.
கிடைத்திருக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கும்போது, ஆபீரர்கள் கிறித்து பிறப்புக்குப் பல நூற்றாண்டுக்கு முன்பே சிந்து நதியைக் கடந்து தற்போதுள்ள இராஜஸ்தான் பகுதிக்கு வடமேற்கு நதி ஓரத்தில் தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னர் அங்கிருந்து,  மகாபாரதம், புராணங்கள் குறிப்பிடுவதைப்போல அவர்கள் பஞ்சாப், மதுவனம், சொளராஷ்டிரம், கொங்கணம் என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது.
ஆபிரர்களின் இனம்
ஆபீரர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிலரும்நாகரிகமடைந்த ஆரிய இனத்தினர் என்று சிலரும் கருதுகின்றனர்.10 வேறு சில அறிஞர்கள் ஆபிரர்கள் ஆரியர்கள் வருதற்கு முன்பே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் என்கின்றனர்11. ‘சில சரித்திர ஆசிரியர்கள் ஆகிர், ஆபிரர்  என்பவர்கள் திராவிடர்களின் சந்ததியினர் என்று கூறியுள்ளதாக’12 சி.பி.லோகநாதன் தெரிவிக்கின்றார்.
ஆபிர என்ற சொல்லுக்கு  இடையர், மாடுமேய்ப்பவர் என்று பொருள். இவர்களின் கடவுளான கிருஷ்ணன் என்ற பெயர் கருமை என்ற பொருளைத் தருவதாகும். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் கழித்தே இவர்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு தக்க ஒரு சான்றாக, கிருஷ்ணன் இந்திர வழிபாட்டோடு கொண்ட முரண்பாட்டைக் கருதலாம். ‘ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள் (பழைய வழக்கப்படி) இந்திரனுக்குப் படையலிட முற்படுகின்றனர். கிருஷ்ணன் அதைத் தடுக்கின்றான். நந்தகோபாலனை நோக்கி, “தந்தையே! நாம் உழவர்களுமல்லர், வணிகருமல்லர். இந்திரனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளையும் மலையுமே நமது தெய்வங்கள்” என்கிறான். பின்னர் தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். இந்திரவழிபாட்டைத் தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழியைக் கையாண்டான் என்று வில்கின்சன் கருதுகிறார்’13 என்று தொ.பரமசிவம் கூறுகின்றார்.
கிருஷ்ணனுக்கும் ஆபீரர்களுக்குமான தொடர்பு
இந்துக்களிடையே மிகப் புகழ்பெற்ற ஒரு வழிபாடாக, இந்தியா முழுமையும் கிருஷ்ண வழிபாடு இருந்து வருகிறது. விஷ்ணு புராணம், பால சரிதம்,  மகாபாரதம், பாகவதம் என வைணவ சமயத்தின் பெரும்பாலானப் புராணங்களும் இதிகாசங்களும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும், ஓர் இடையனாக இடைச்சமூகத்தில் அவன் நிகழ்த்திய புதுமைகளையும் அவைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றன.
கிருஷ்ணன் தான் வாழும்போதே கடவுளாக வணங்கப்பெற்றான் என்பதை விஷ்ணு புராணம், பாகவதம், பாலசரிதம் உள்ளிட்டப் புராணங்கள் எடுத்தியம்புகின்றன. கிருஷ்ணன் யார், கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட வழிபாட்டு முறை தமிழகத்தில் எப்போது கால்கொண்டது ஆகியன பற்றி விவாக ஆராய வேண்டிய ஒன்றாகும்.
கிருஷ்ணன் யார்?
கிருஷ்ணன், ஆபிரர் என்று முன்பு வழங்கப்பட்ட, தற்போதுள்ள அஹீர்களுடைய குலத்தைச் சார்ந்தவன் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் பீகார், சண்டிகர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி,  சட்டீஷ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்ரகாண்ட் என வடஇந்தியா முழுமையும் பரந்து வாழ்கின்றனர்.
கிருஷ்ணனுடைய இளம்பருவம், மேய்ச்சல் நிலப்பின்னணி அவனை ஓர் இடையனாகவே சித்தரிப்பது கண்கூடு. வைணவ சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழலில்  பிற இனக்குழுக்களின் வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டது என்று வரலாற்றிஞர்கள் இயம்புவர். அதன்படி, ஆபிரர்களின் தலைவனாக வாழ்ந்து, அவர்களால் வழிபடப்பட்ட கிருஷ்ண வழிபாட்டை வைணவம் உள்வாங்கிக் கொண்டதாக பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
‘கிருஷ்ணருடைய இளம்பருவ மேய்ச்சல் நில பின்னணி அவரை ஆபீரர் இனமக்கள் வணங்கிய இளம் பருவக் கடவுளோடு ஒன்றாக்கியதன் விளைவே’14 என்று சுவீரா ஜெயஸ்வால் கூறுகின்றார்.  ‘கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோர் வடமதுரைக் கருகில் மதுவனத்தி லிருந்து துவாரகையைச் சுற்றியுள்ள அனுபா, ஆனர்த்தா எனும் இடங்கள் வரை பரவியிருந்த ஆபிர இனமக்களைச் சார்ந்தவர்கள்’15 என்று ஆர்.ஜி.பந்தர்க்கார் கூறுகின்றார். டி.டி.கோசாம்பியும் கிருஷ்ணனைக், ‘கிறித்தவர்களின் காலம் துவங்கியபோது வாழ்ந்துவந்த ஆபீரர் எனும் ஆநிரை வளர்ப்பு மக்களோடு உறவு ஏற்படுத்த வகைசெய்கிறது’16 என்று கூறுகின்றார்.
கிருஷ்ணன் – ஆபீரர்தொடர்பு
கிருஷ்ணனை ஆபீரர்களோடு தொடர்புபடுத்தவும்  அவன் ஆபீரர் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறுவதற்கும் மேற்கூறிய அறிஞர்கள் தரும் விளக்கங்களாவன,

 • ஹரி வமிசமும், பாசகவியின் பால சரிதமும் கிருஷ்ணன் கோசலையில் வளர்க்கபட்டான் என்று கூறுகின்றன. மதர கோச நிகண்டின்படி கோசலைக்கு ஆபீரப்பள்ளி எனும் பொருள் உண்டு. மேலும் இஃது ஆபீரா, பல்லவா என்ற  சொற்களும்  கோபா, கோபாலா என்ற சொற்களும் ஒரே பொருளை உடையன என்றும் இந்நிகண்டு பொருள் தருகிறது.(பந்தர்கார்,1913)
 • ஆபீரர்கள் நாடோடி இனத்தவர்கள். ஒரு நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு தேவை, ஆகவே அவர்களுடைய கடவுளான கிருஷ்ணனும் இளமையும் சிற்றின்ப நாட்டமும், விளையாட்டு புத்தியுடையவருமான இருக்கிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991)
 • ‘விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணன் தம் இனத்தவரை நோக்கி அவர்கள் நிலமோ வீடுகளோ இன்றி வண்டிகளையும் ஆனிரைகளையும் ஓட்டித்திரிவதனால் பசுக்களும், மலைகளுமே அவர்களுக்கு தெய்வங்கள் என்று சொல்கிறார்’ (சுவீரா ஜெயஸ்வால், 1991). இதன் மூலம் நாடோடி இனமான ஆபிரர்களையே கிருஷ்ணன் இவ்வாறு கூறுகின்றான் என்பது பெறப்படுகிறது.
 • ‘வாசுதேவர் கம்சனுடைய சிறையிலிருந்து விடுபட்டவுடன் நந்தருடைய வண்டிக்கருகில் சென்றார். தமக்குக் குழந்தைப் பிறந்ததறிந்த நந்தர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்ததனைக் கண்டார்’ என்று வேறொருப் பகுதியில் விஷ்ணுபுராணம் கூறுவதாக பந்தர்கார் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக்காட்டுகின்றார்.
 • ‘மகாபாரத்ததில் கிருஷ்ணனுடைய ஜனங்கள் கடைப்பிடித்த இன்றும்கூட வரலாற்று ரீதியான ஆபிரர்கள் நடத்திவருவதுமான கடத்தல் முறைத் திருமணங்களும் இழிவாகவே கருதப்பட்டன’ என்று கோசாம்பி குறிப்பிடுகின்றார் (டி.டி.கோசாம்பி, 2006). கிருஷ்ணனே இத்தகைய கடத்தல்முறை மணத்தின் மூலம்தான் ருக்மணியை மணந்ததாக புராணங்களின் மூலம் நாம் அறிகின்றோம்.
 • தமது எட்டாவது அவதாரத்தில் ஆபீரர்கள் மத்தியில் தான் பிறக்கப்போவதாக விஷ்ணு கூறியதாக விஷ்ணு புராணம் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக் காட்டுகிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991).

மகாபாரதத்தில் மௌசால பருவத்தில், பெரிய அழிவுக்குப் பின் எஞ்சிய யாதவர்களை அர்சுனன் அழைத்து வருவதாக ஒரு குறிப்பு உண்டு. அதில் வருவதாவதுआभीरैरभिभूयाजौ हृताः पञ्चनदालयैः ॥धनुरादाय तत्राहं नाशकं तस्य पूरणे।यथा पुरा च मे वीर्यं भुजयोर्न महामुने।उपदेष्टुं मम श्रेयो भवानर्हति सत्तम॥’17அதாவது,
“ஓ முனிவர்களே… இதைக் கேளுங்கள், இதைவிட எனக்கு வலி வேறு என்ன இருக்க முடியும். வலிமையுடைய ஆபிரர்களின் பஞ்சநத பகுதியினைக் கடந்து வருகையில் அவர்கள் ஆயிரக்கணக்கான விருஷ்ணி இனப் பெண்களைக் கவர்ந்து கொண்டார்கள்.என்னால் அவர்களோடு விற்போர் செய்யமுடியவில்லை. என் கையில் வலிமையில்லை. ஓ! ஆண்களில் சிறந்தவர்களே எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.”
என்று அர்ச்சுனன் சொல்வதாக வருகிறது. கோசம்பி, ஜெயஸ்வால் போன்றோர் குறிப்பிடும் பெண்களை கடத்தல் முறை ஆபிரர்களிடையே இருந்துள்ளமைக்கு மாபாரதம் சான்று தருகிறது. கிருஷ்ணனும் இவ்விதம்தான் ருக்மணியை அடைந்தான் என்று முன்பே கண்டோம்.
ஹரிவமிசம் முதலானப் புராணங்கள் கூறும் கோசலை என்னும் சொல்லுக்கு ஆபீரப்பள்ளி என்றொரு பொருள் உள்ளமையாலும், சிற்றின்ப வேட்கை, கேளிக்கை ஆகியன உடையவனாகக் கிருஷ்ணன் காணப்படுவதாகையாளும், வண்டிகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் ஆபீரர்களை கிருஷ்ணன் தன்னுடைய உறவினர்கள் என்று கூறுவதாலும், ஆபீரர்களின் வரலாற்று ரீதியான கடத்தல் முறை (இதனை வடநூலார் இராக்கதம் என்பர்) மணத்தை கிருஷ்ணனே செய்தமையாலும் இன்னபிற காரணங்களாலும், சான்றுகளின் படியும் கிருஷ்ணன் ஆபீர இனத்தவன் என்று முடிவு கூறலாம். கிருஷ்ணனை வைணவத்தில் ஐக்கியப்படுதிய போது, அவனுடைய முழு அடையாளங்களும் புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி மாறிப்போயுள்ளதால், மேற்கண்ட குறிப்புகளின்வழியே அவன் ஆபீர இனத்தவன் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது.
புராணங்கள், இதிகாசங்கள் யாவும் கிருஷ்ணனை யயாதியின் வழியில் வந்தவன் என்றும், யாதவன் என்றும் பேசுவது இப்படியான பெயர் கொண்ட இடைச்சமூகத்தோடு ஆபிரர் இனம் கலந்ததையேக் காட்டுகிறது. பிற்காலத்தில் கிருஷ்ணன் யாதவர்களின் கடவுள் என்றே பேசப்பட்டுள்ளான்.
தென்னிந்தியாவுடனானத் தொடர்பு
தமிழகத்திற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த வேளிர்கள் ஆபிரர்களாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இஃதுபற்றி வேளிர் வரலாறு எழுதிய இராகவையங்கார் தரும் செய்திகளாவன,
தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் திருமால்வழியினராய்த் துவராபதியினின்று… பண்டைவேளிர் தமிழ் நாட்டுக் குடியேறிய காலம் கி.மு.10ஆம் நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்தும் மென்பதும், வேளிர் பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இஃது என்பதும், அன்னோர் பெருமை இன்னவென்பதும் புலப்படுமாறு கண்டுகொள்க.18
கண்ணனது ஆபீர-யாதவர்கள்தாம் வேளிர்கள் என்று இராகவையங்கார் கொள்வதாக நாம் இங்குக் கொள்ளலாம்.
‘கிருஷ்ணனின் வழிவந்த வேளிர்கள் துவாரகையில் இருந்து, மராட்டிம், கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தனர்’19 என்று வரலாற்றில் யாதவர்கள் என்ற நூலை எழுதிய சி.பி.லோகநாதன் கூறுகின்றார்.
ஆபீரர்களின் அரசு மேற்கு தக்காணத்தில் சாக சத்திரபர்கள், சாதவாகனர் கீழ் சுறுசுறுப்பாக இருந்துவந்துள்ளதாக ஜெயஸ்வால் கூறுகின்றார். கி.பி.181ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு பாபகன் என்னும் ஆபிர சேனாதிபதியின் மகனாகிய சேனாதிபதி ருத்ரபதியைப் பற்றிப் பேசுகிறது. நாசிக்குகைக் கல்வெட்டொன்று கி.பி.3 சேர்ந்த ஈஸ்வர சேனர் என்னும் ஆபிரர்களின் அரசரைப் பற்றிக் குறிப்படுகிறது.20 கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்புத் தொடங்கி இவர்களது ஆட்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் கிருஷ்ண வழிபாடு
இராகவையங்கார், லோகநாதன் ஆகியோர்களது கருத்துப்படியும், மேற்கண்டவாறு, தென்னிந்தியப்பகுதியில் ஆபிரர்களது தொல்லியல் சான்றுகள் படியும் அன்னோர் தென்னிந்தியப் பகுதிகளில் பரவியதை எடுத்துக்காட்டுகின்றன. கண்ணன் வழிவந்தோர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்பது இதன் மூலம் அறியற்பாலது.  இவர்களின் ஒரு பிரிவினரோ அல்லது  வேளிர்கள் என்று அழைக்கப்பட்ட ஆயர் அரசர்களாகவோ இருக்கலாம் என துணியலாம். அப்படியாயின் இவர்கள்தாம் தமிழகத்தில் கிருஷ்ண வழிபாட்டை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தமிழகம் வந்த ஆபிரர்கள் என்ற வேளிர்களின் கிருஷ்ண வழிபாடு, தமிழக இடையர்களுடைய இடையர் தெய்வ வழிபாடான ‘மால்’ வழிபாட்டோடு விரவப்பெற்றிருக்க வேண்டும். ‘முல்லை நிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதார செய்திகளும் கலந்துவிட்டதைச் சங்கப் பாடல்களில் காணலாம்’21 என்ற தொ.பரமசிவத்தின் கூற்று, மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்யும். இராகவையங்கார் சொல்வதைப்போன்று அவர்கள் கி.மு.10ம் நூற்றாண்டில் தமிழகம் வந்தனர் என்பதற்கு போதிய சான்று இல்லாத அதே சமயத்தில், கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தமிழத்திற்கு வந்திருக்கலாம் என்று துணியலாம்.
ஆஹிர் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவம் ஆபீர என்றும், ஆபீரர்களின் மொழி, ஆபீர பாஷா என்றும் இதனை பரதர், தம் நாட்டிய சாஸ்திரத்தில் ‘அபப்ரம்சத்’ என்றும் குறிப்பிடுகிறார் என்றும் எஸ்.இராமசந்திரன் குறிப்பிடுகின்றார்.22
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்று, கிருஷ்ணனின் பெண்களை அண்டர் மகளிர் என்று குறிக்கிறது
வாழியர் நீயே வடாஅதுவண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறைஅண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்மரம்செல மிதித்த மாஅல் போல (அகம்:59:3-6)
வடதிசையில் உள்ள யமுனைத் துறையில் நீராடும் அண்டர் மகளிரின் ஆடையை ஒளித்துப்பின் அவற்றைக் குருந்தமரக் கிளையை வளைத்துத் தந்த கண்ணபிரானைப் போல’ என்பது இதன் பொருளாகும்.
இங்கு அண்டர் மகளிரது ஆடையைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்தான் என்பது பெறப்படுகிறது. அண்டர் என்னும் சொல்லுக்கு அண்டி வாழ்வோர் என்றும் பொருளுண்டு. ஊர்புறத்தினையடுத்த பகுதிகளில் அவர்கள் தொகுப்பாக வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றிருக்கலாம். தவிரவும் தமிழகத்தை அண்டி வந்தோர் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு, தமிழகத்தில் வாழ்ந்த அண்டர் குடி யமுனை நதி பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணனின் பெண்களோடு தொடர்புபடுத்தியிருப்பது இங்கு புதிய ஐயத்தை எழுப்பியுள்ளது. தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்த கிருஷ்ணனின் குடியினரில் அண்டர்களும் ஒரு பிரிவினராக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இதற்கான வலுவான சான்றுகள் ஏதும் இல்லை எனினும் இப்படி இணைத்து எண்ணவும் வழிவகையுண்டு. மேற்படி தொடராய்வுகள்தாம் இதற்கான தீர்வினைத் தரும்.

அடிக்குறிப்புகள்

 1. 1.   மொ.அ.துரை அரங்கசாமி, சங்க காலச் சிறப்பு பெயர்கள், பாரி நிலையம், 2014, ப.274
 2. மேலது, ப.274
 3. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
 4. பி.வி.ஜகதீச ஐயர், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்,2009, ப.20 &165.
 5. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014
 6. Sudhakar Chattopadhyaya, Evolution of Hindu Sects, 1970, p.72.
 7. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
 8. மேலது, ப.107
 9. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014
 10. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System,1913. p.52.
 11. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.105
 12. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.24
 13. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.138.
 14. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், 1991, ப.104
 15. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System, 1913. p.51.
 16. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.207
 17. மகாபாரதம், மௌசால பருவம்,  http://prramamurthy1931.blogspot.in/2013/01/mahabharata-mausala-parva.html/23-01-2014.
 18. மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 2004, ப.45-47
 19. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.29
 20. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.107
 21. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.139
 22. 13, அக்டேபர் 2015 அன்று உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தில் கீழடி அகழ்வாய்வு பற்றிய ஒருநாள் கருத்தரங்கில் திரு. எஸ் இராமச்சந்திரன் அவர்கள் சொல்லிய செய்தி. அவருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்..

கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை

கிருஷ்ணனும் ஆபீரரும்

ஆய்வுக்கட்டுரை

இந்துக்களிடையே மிகப் புகழ்பெற்ற ஒரு வழிபாடாக, இந்தியா முழுமையும் கிருஷ்ண வழிபாடு இருந்து வருகிறது. விஷ்ணு புராணம், பால சரிதம்,  மகாபாரதம், பாகவதம் என வைணவ சமயத்தின் பெரும்பாலானப் புராணங்களும் இதிகாசங்களும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும், ஓர் இடையனாக இடைச்சமூகத்தில் அவன் நிகழ்த்திய புதுமைகளையும் அவைப் போற்றிப்புகழ்ந்து கொண்டாடுகின்றன. மகாபாரதத்தில் கிருஷ்ணனுடைய பங்களிப்பு மிக முக்கியமானது. சில வரலாற்றிஞர்கள் மகாபாரதம் கௌரவர்கள், பாண்டவர்கள் என்னும் பரதப் பெருங்குடி பிரிவுகளிடையே நடைபெற்ற போராட்டத்தை சித்தரிக்கிறது1 என்று கூறுகின்றனர். இஃது நிகழ்ந்தது கி.மு.10ஆக இருக்கலாம் என்று ஆர்.எஸ். சர்மா2, சி.பி.லோகநாதன்3 போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

கிருஷ்ணன் தான் வாழும்போதே கடவுளாக வணங்கப்பெற்றான் என்பதை விஷ்ணு புராணம், பாகவதம், பாலசரிதம் உள்ளிட்டப் புராணங்கள் எடுத்தியம்புகின்றன. கிருஷ்ணன் யார், கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட வழிபாட்டு முறை தமிழகத்தில் எப்போது கால்கொண்டது ஆகியன பற்றி விவரிக்க முயலுகிறது இக்கட்டுரை.
கிருஷ்ணன் யார்?
கிருஷ்ணன் யது குலத்தில் உதித்தவன் என்றும் யாதவ அரசனென்றும் புராணங்கள் இயம்பியுள்ளன. ஆனால் கிருஷ்ணனைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள், புராணங்கள் தரும் யது, யயாதி, யாதவத் தொடர்பை மறுக்கின்றனர். கிருஷ்ணன், ஆபிரர் என்று முன்பு வழங்கப்பட்ட, தற்போதுள்ள அஹீர்களுடைய குலத்தைச் சார்ந்தவன் என்று மேலும் கூறுகின்றனர். ஆஹீர்கள் பீகார், சண்டிகர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி,  சட்டீஷ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்ரகாண்ட் என வடஇந்தியா முழுமையும் பரந்து வாழ்கின்றனர்.
கிருஷ்ணனுடைய இளம்பருவம், மேய்ச்சல் நிலப்பின்னணி அவனை ஓர் இடையனாகவே சித்தரிப்பது கண்கூடு. வைணவ சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழலில்  பிற இனக்குழுக்களின் வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டது என்று வரலாற்றிஞர்கள் இயம்புவர். அதன்படி, ஆபிரர்களின் தலைவனாக வாழ்ந்து, அவர்களால் வழிபடப்பட்ட கிருஷ்ண வழிபாட்டை வைணவம் உள்வாங்கிக் கொண்டதாக பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
‘கிருஷ்ணருடைய இளம்பருவ மேய்ச்சல் நில பின்னணி அவரை ஆபீரர் இனமக்கள் வணங்கிய இளம் பருவக் கடவுளோடு ஒன்றாக்கியதன் விளைவே’4 என்று சுவீரா ஜெயஸ்வால் கூறுகின்றார்.  ‘கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோர் வடமதுரைக் கருகில் மதுவனத்தி லிருந்து துவாரகையைச் சுற்றியுள்ள அனுபா, ஆனர்த்தா எனும் இடங்கள் வரை பரவியிருந்தவர்களும் இக்காலத்தில்  அஹீர்கள் என்று வழங்கப்படுபவர்களுமான ஆபிர இனமக்களைச் சார்ந்தவர்கள்’5 என்று ஆர்.ஜி.பந்தர்க்கார் கூறுகின்றார். டி.டி.கோசாம்பி கிருஷ்ணனைக், ‘கிறித்தவர்களின் காலம் துவங்கியபோது வாழ்ந்துவந்த இன்றுள்ள அஹீர் ஜாதியின் பூர்வக்குல முதல்வர்களாகவும் இருந்த  ஆபீரர் எனும் ஆநிரை வளர்ப்பு மக்களோடு உறவு ஏற்படுத்த வகைசெய்கிறது’6 என்று கூறுகின்றார். சி.பி.லோகநாதனும் ‘அஹீர்கள் கிருஷ்ணனின் வழிவந்த யாதவர்கள்’ என்று தன்னுடைய ‘வரலாற்றில் யாதவர்கள்’7 என்னும் நூலில் கூறுகின்றார். மேற்கண்ட அறிஞர்களின் கூற்றின்படி கண்ணன் ஆபிர இனத்தினனாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கண்ணனை இவ்வினதாரோடு தொடர்புபடுத்த, அறிஞர்கள் காட்டும் தொடர்புகளைத் தொடர்ந்து காணலாம்.
கிருஷ்ணன் – ஆபீரர்தொடர்பு
கிருஷ்ணனை ஆபீரர்களோடு தொடர்புபடுத்தவும்  அவன் ஆபீரர் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறுவதற்கும் மேற்கூறிய அறிஞர்கள் தரும் விளக்கங்களாவன,

 • ஹரி வமிசமும், பாசகவியின் பால சரிதமும் கிருஷ்ணன் கோசலையில் வளர்க்கபட்டான் என்று கூறுகின்றன. மதர கோச நிகண்டின்படி கோசலைக்கு ஆபீரப்பள்ளி எனும் பொருள் உண்டு. மேலும் இஃது ஆபீரா, பல்லவா என்ற  சொற்களும்  கோபா, கோபாலா என்ற சொற்களும் ஒரே பொருளை உடையன என்றும் இந்நிகண்டு பொருள் தருகிறது.(பந்தர்கார்,1913)
 • ஆபீரர்கள் நாடோடி இனத்தவர்கள். ஒரு நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு தேவை, ஆகவே அவர்களுடைய கடவுளான கிருஷ்ணனும் இளமையும் சிற்றின்ப நாட்டமும், விளையாட்டு புத்தியுடையவருமான இருக்கிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991)
 • ‘விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணன் தம் இனத்தவரை நோக்கி அவர்கள் நிலமோ வீடுகளோ இன்றி வண்டிகளையும் ஆனிரைகளையும் ஓட்டித்திரிவதனால் பசுக்களும், மலைகளுமே அவர்களுக்கு தெய்வங்கள் என்று சொல்கிறார்’ (சுவீரா ஜெயஸ்வால், 1991). இதன் மூலம் நாடோடி இனமான ஆபிரர்களையே கிருஷ்ணன் இவ்வாறு கூறுகின்றான் என்பது பெறப்படுகிறது.
 • ‘வாசுதேவர் கம்சனுடைய சிறையிலிருந்து விடுபட்டவுடன் நந்தருடைய வண்டிக்கருகில் சென்றார். தமக்குக் குழந்தைப் பிறந்ததறிந்த நந்தர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்ததனைக் கண்டார்’ என்று வேறொருப் பகுதியில் விஷ்ணுபுராணம் கூறுவதாக பந்தர்கார் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக்காட்டுகின்றார்.
 • ‘மகாபாரத்ததில் கிருஷ்ணனுடைய ஜனங்கள் கடைப்பிடித்த இன்றும்கூட வரலாற்று ரீதியான ஆபிரர்கள் நடத்திவருவதுமான கடத்தல் முறைத் திருமணங்களும் இழிவாகவே கருதப்பட்டன’ என்று கோசாம்பி குறிப்பிடுகின்றார் (டி.டி.கோசாம்பி, 2006). கிருஷ்ணனே இத்தகைய கடத்தல்முறை மணத்தின் மூலம்தான் ருக்மணியை மணந்ததாக புராணங்களின் மூலம் நாம் அறிகின்றோம். 
 • தமது எட்டாவது அவதாரத்தில் ஆபீரர்கள் மத்தியில் தான் பிறக்கப்போவதாக விஷ்ணு கூறியதாக விஷ்ணு புராணம் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக் காட்டுகிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991).

மகாபாரதத்தில் மௌசால பருவத்தில், பெரிய அழிவுக்குப் பின் எஞ்சிய யாதவர்களை அர்சுனன் அழைத்து வருவதாக ஒரு குறிப்பு உண்டு. அதில் வருவதாவதுआभीरैरभिभूयाजौ हृताः पञ्चनदालयैः ॥धनुरादाय तत्राहं नाशकं तस्य पूरणे।यथा पुरा च मे वीर्यं भुजयोर्न महामुने।उपदेष्टुं मम श्रेयो भवानर्हति सत्तम॥’8அதாவது,
“ஓ முனிவர்களே… இதைக் கேளுங்கள், இதைவிட எனக்கு வலி வேறு என்ன இருக்க முடியும். வலிமையுடைய ஆபிரர்களின் பஞ்சநத பகுதியினைக் கடந்து வருகையில் அவர்கள் ஆயிரக்கணக்கான விருஷ்ணி இனப் பெண்களைக் கவர்ந்து கொண்டார்கள்.என்னால் அவர்களோடு விற்போர் செய்யமுடியவில்லை. என் கையில் வலிமையில்லை. ஓ! ஆண்களில் சிறந்தவர்களே எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.”என்று அர்ச்சுனன் சொல்வதாக வருகிறது. கோசம்பி, ஜெயஸ்வால் போன்றோர் குறிப்பிடும் பெண்களை கடத்தல் முறை ஆபிரர்களிடையே இருந்துள்ளமைக்கு மாபாரதம் சான்று தருகிறது. கிருஷ்ணனும் இவ்விதம்தான் ருக்மணியை அடைந்தான் என்று முன்பே கண்டோம்.ஹரிவமிசம் முதலானப் புராணங்கள் கூறும் கோசலை என்னும் சொல்லுக்கு ஆபீரப்பள்ளி என்றொரு பொருள் உள்ளமையாலும், சிற்றின்ப வேட்கை, கேளிக்கை ஆகியன உடையவனாகக் கிருஷ்ணன் காணப்படுவதாகையாளும், வண்டிகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் ஆபீரர்களை கிருஷ்ணன் தன்னுடைய உறவினர்கள் என்று கூறுவதாலும், ஆபீரர்களின் வரலாற்று ரீதியான கடத்தல் முறை (இதனை வடநூலார் இராக்கதம் என்பர்) மணத்தை கிருஷ்ணனே செய்தமையாலும் இன்னபிற காரணங்களாலும், சான்றுகளின் படியும் கிருஷ்ணன் ஆபீர இனத்தவன் என்று முடிவு கூறலாம். கிருஷ்ணனை வைணவத்தில் ஐக்கியப்படுதிய போது, அவனுடைய முழு அடையாளங்களும் புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி மாறிப்போயுள்ளதால், மேற்கண்ட குறிப்புகளின்வழியே அவன் ஆபீர இனத்தவன் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது.
ஆபிரர்களின் தோற்றம்
ஆபிரர்களின் தோற்றம், பரவல் குறித்து பலரும் பலவிதக் கருத்துக்களைத் தருகிறார்கள். ஆபிரர்களைப் பற்றி ஜெயஸ்வால் தரும் தொகுப்பானச் சில செய்திகளாவன,
‘ஆபிரர்கள் முதலில் பஞ்சாபில் வாழ்ந்து வந்தனர். பின் ராஜபுதனத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் அவர்கள் கீழைச் சிந்து சமவெளிக்கும் பின்னர் அங்கிருந்து மேற்குத் தக்காணத்திலுள்ள சௌராஷ்டிரம், அபராந் ஆகிய பகுதிகளுக்கும் சென்றடைந்தனர்’ என்று தேபால மித்ரா தன்னுடைய த அபிராஸ் அண்ட் தேர் காண்ட்டிரிபியூசன் டு த இந்தியன் கல்சர் எனும் நூலில் கூறியுள்ளார். டி.சி.சர்க்கார் அவர்களை ஹரீட்டிற்கும் காண்ட ஹாருக்கும் நடுவிலுள்ள அபிரவன் என்ற நாட்டுடன் தொடர்பு படுத்திப் பேசுகிறார். அஸர்பெய்ஜான் எனும் இடத்திற்கருகில் வாழ்ந்து வந்த அபைரை என்ற மேய்ச்சல் நில மக்களே ஆபிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அவர்கள் வெளி நாட்டிலிருந்து தோன்றியவர்கள் என்ற கொள்கையை மிராஷியும் வேறு அறிஞர்களும் மறுத்து ஆபிரர்கள் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பஞ்சாபில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் என்பர்.பதஞ்சலி ஆபிரர்களை சூத்திர வருணத்தின் துணைச் சாதியர் எனக் குறிப்பிடுகின்றார்.தேவகார் குகைப் புடைப்புச் சிற்பம் கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோரான நந்தரையும் யசோதையையும் வெளிப்படையாக எடுத்துக்காட்டும் தன்மை கொண்ட அன்னிய ஆடைகளை அணிந்திருந்ததைக் காட்டுகிறது. கிருஷ்ணருடைய ஆயர் குலத்தவர்களை குப்தர் காலத்து ஓவியர்கள் வெளி நாட்டினராகக் கருதியிருப்பதையே அச்சிற்பங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.9இப்படியாக ஆபிரர்களின் வரவு பற்றி பல தகவல்களைத் தருகிறார் ஜெயஸ்வால். புராதண இந்தியா  எனும் பழைய 56 தேசங்கள் என்ற நூலை எழுதிய பி.வி.ஜகதீச ஐயர் தரும் ஆபீரர்கள் பற்றி செய்திகளாவன,
ஆபீரதேசமானது ஸிந்து தேசத்திற்கு கிழக்கிலும் குந்தி (குந்தல) தேசங்களுக்கு நேர் மேற்கிலும் த்ரிகூட மலைக்கு வடக்கிலும் அகன்ற ஒரு பெரிய பூமியில் இருக்கிறது.… இந்த தேசத்திற்கு மேற்கு எல்லையில் ஓடும் அந்த பெரிய ஸிந்து நதியே இதற்கு முக்கிய நதியாகும்.10என்று கூறுகின்றார்.
மேலும் ‘புராண ஆபிரர்கள் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் என ரெஜினால்ட் எட்வர்ட் என்தோவன் எனும் பிரிட்டிஷ் அறிஞர் கூறுகின்றார். ஹக் நெவில் எனும் அறிஞர் அபைரா எனும் பழங்குடி மக்கள் மெசபடோமியாவிலிருந்து  நதியைக் கடந்து, இந்தியாவின் உட்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறார். அவர்களே ஆபிரர்கள் எனப்பட்ட அஹீர்கள் என்கிறார்.’11

மகாபாரதத்தில் மௌசால பருவம் அவர்கள் பஞ்சநதத்திற்கு அருகில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ‘அபீரியா என வழங்கப்பட்ட ஆபிரர் நாடு, சிந்துவெளிப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக டாலமி குறிப்பிடுகிறார்’.12
மேற்கண்ட சான்றுகளை எல்லாம் நோக்குமிடத்து, ஆபீரர்கள் என்ற பழங்குடி ஒன்று இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வெளியேயிருந்து வெகுகாலத்திற்கு முன்பே சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு பரவியிருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.
காலம்
இவர்கள் எந்த நூற்றாண்டில் பரவினர் என்பது விவாதத்திற்கு வழிவகுப்பதாகவே உள்ளது. ஏனெனில் பந்தர்க்கார்,ஜெயஸ்வால் போன்ற அறிஞர்கள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் பரவினர் என்று குறிக்கினர். ஆனால் பதஞ்சலி முனிவர் இவர்களை ஆநிரவசிக (தூய்மையான) சூத்திரர்13 என்று பேசுவதால் இவரது காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே எனத் தெரிகிறது. ‘கி.மு.3இல் ஆபிரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்’14 என்று ஜெயஸ்வாலும் சந்தேகிக்கிறார்.
கிடைத்திருக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கும்போது, ஆபீரர்கள் கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே சிந்து நதியைக் கடந்து தற்போதுள்ள இராஜஸ்தான் பகுதிக்கு வடமேற்கு நதி ஓரத்தில் தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னர் அங்கிருந்து,  மகாபாரதம், புராணங்கள் குறிப்பிடுவதைப்போல அவர்கள் பஞ்சாப், மதுவனம், சொளராஷ்டிரம், கொங்கணம் என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது.
ஆபிரர்களின் இனம்
ஏ.பி. கர்மாகர் புராணங்களின் சான்றுபடி ஆபீரர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பார்.15 இவர்கள் நாகரிகமடைந்த ஆரிய இனத்தினர் என்று பந்தர்கார் கூறுகின்றார்.16 மிராஷியும் வேறு அறிஞர்களும் ஆபிரர்கள் ஆரியர்கள் வருதற்கு முன்பே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் என்கின்றனர்17. ‘சில சரித்திர ஆசிரியர்கள் ஆகிர், ஆபிரர்  என்பவர்கள் திராவிடர்களின் சந்ததியினர் என்று கூறியுள்ளதாக’18 சி.பி.லோகநாதன் தெரிவிக்கின்றார்.
ஆபிர என்ற சொல்லுக்கு  இடையர், மாடுமேய்ப்பவர் என்று பொருள். இவர்களின் கடவுளான கிருஷ்ணன் என்ற பெயர் கருமை என்ற பொருளைத் தருவதாகும். தமிழில் வழங்கப்படும் கண்ணன் எனும் சொல்லுக்குக் கண்களையுடையவன், கருமை என்று பொருள் கூறப்படுகிறது. ஆக இவர்கள் திராவிடர்களைப் போன்று கருமைநிறம் கொண்டவர்கள் என்று கொள்வதில் தவறில்லை.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் கழித்தே இவர்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு தக்கதொரு சான்றாக, கிருஷ்ணன் இந்திர வழிபாட்டோடு கொண்ட முரண்பாட்டைக் கருதலாம். ‘ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள் (பழைய வழக்கப்படி) இந்திரனுக்குப் படையலிட முற்படுகின்றனர். கிருஷ்ணன் அதைத் தடுக்கின்றான். நந்தகோபாலனை நோக்கி, “தந்தையே! நாம் உழவர்களுமல்லர், வணிகருமல்லர். இந்திரனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளையும் மலையுமே நமது தெய்வங்கள்” என்கிறான். பின்னர் தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். இந்திரவழிபாட்டைத் தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழியைக் கையாண்டான் என்று வில்கின்சன் கருதுகிறார்’19 என்று தொ.பரமசிவம் கூறுகின்றார்.
யாதவரும் கிருஷ்ணனும்
யாதவர்களோடு கிருஷ்ணன் இணைத்துப் பேசப்படுவதை பற்றி, கோசம்பி கருதுவதாவது, ‘இடைக்காலத்தில்  யாதவர்கள் அல்லது ஜாதவர்கள் ஊதியத்திற்காக பிராமணர்கள் அளித்த புரட்டான வம்சாவளியால் கிருஷ்ணருடைய யதுக்களுடன் பொருத்தப்பட்டுத் திடீர் உயர்நிலையை அடைந்தவர்களாவர் என்றும், கிருஷ்ணனின் கரிய நிறமும் பூர்வகுடி மக்களுடன் ஆரியர்கள் கொண்ட ஒருமைபாட்டும் ஒரு நன் நல்லிணக்க முயற்சியாகவே கருதலாம்’ என்றும் கருதுகிறார்.20
புராணங்கள், இதிகாசங்கள் யாவும் கிருஷ்ணனை யயாதியின் வழியில் வந்தவன் என்றும், யாதவன் என்றும் பேசுவது இப்படியான பெயர் கொண்ட இடைச்சமூகத்தோடு ஆபிரர் இனம் கலந்ததையேக் காட்டுகிறது. பிற்காலத்தில் கிருஷ்ணன் யாதவர்களின் கடவுள் என்றே பேசப்பட்டுள்ளான்.
தென்னிந்தியாவுடனானத் தொடர்பு
தமிழகத்திற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த வேளிர்கள் ஆபிரர்களாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இஃதுபற்றி வேளிர் வரலாறு எழுதிய இராகவையங்கார் தரும் செய்திகளாவன,
தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் திருமால்வழியினராய்த் துவராபதியினின்று… பண்டைவேளிர் தமிழ் நாட்டுக் குடியேறிய காலம் கி.மு.10ஆம் நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்தும் மென்பதும், வேளிர் பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இஃது என்பதும், அன்னோர் பெருமை இன்னவென்பதும் புலப்படுமாறு கண்டுகொள்க.21கண்ணனது ஆபீர-யாதவர்கள்தாம் வேளிர்கள் என்று இராகவையங்கார் கொள்வதாக நாம் இங்குக் கொள்ளலாம்.
‘கிருஷ்ணனின் வழிவந்த வேளிர்கள் துவாரகையில் இருந்து, மராட்டிம், கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தனர்’22 என்று வரலாற்றில் யாதவர்கள் என்ற நூலை எழுதிய சி.பி.லோகநாதன் கூறுகின்றார்.
ஆபீரர்களின் அரசு மேற்கு தக்காணத்தில் சாக சத்திரபர்கள், சாதவாகனர் கீழ் சுறுசுறுப்பாக இருந்துவந்துள்ளதாக ஜெயஸ்வால் கூறுகின்றார். கி.பி.181ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு பாபகன் என்னும் ஆபிர சேனாதிபதியின் மகனாகிய சேனாதிபதி ருத்ரபதியைப் பற்றிப் பேசுகிறது. நாசிக்குகைக் கல்வெட்டொன்று கி.பி.3 சேர்ந்த ஈஸ்வர சேனர் என்னும் ஆபிரர்களின் அரசரைப் பற்றிக் குறிப்படுகிறது.23 கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்புத் தொடங்கி இவர்களது ஆட்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் கிருஷ்ண வழிபாடு
இராகவையங்கார், லோகநாதன் ஆகியோர்களது கருத்துப்படியும், மேற்கண்டவாறு, தென்னிந்தியப்பகுதியில் ஆபிரர்களது தொல்லியல் சான்றுகள் படியும் அன்னோர் தென்னிந்தியப் பகுதிகளில் பரவியதை எடுத்துக்காட்டுகின்றன. கண்ணன் வழிவந்தோர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்பது இதன் மூலம் அறியற்பாலது.  இவர்களின் ஒரு பிரிவினரோ அல்லது  வேளிர்கள் என்று அழைக்கப்பட்ட ஆயர் அரசர்களாகவோ இருக்கலாம் என துணியலாம். அப்படியாயின் இவர்கள்தாம் தமிழகத்தில் கிருஷ்ண வழிபாட்டை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தமிழகம் வந்த ஆபிரர்கள் என்ற வேளிர்களின் கிருஷ்ண வழிபாடு, தமிழக இடையர்களுடைய இடையர் தெய்வ வழிபாடான ‘மால்’ வழிபாட்டோடு விரவப்பெற்றிருக்க வேண்டும். ‘முல்லை நிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதார செய்திகளும் கலந்துவிட்டதைச் சங்கப் பாடல்களில் காணலாம்’24 என்ற தொ.பரமசிவத்தின் கூற்று, மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்யும். இராகவையங்கார் சொல்வதைப்போன்று அவர்கள் கி.மு.10ம் நூற்றாண்டில் தமிழகம் வந்தனர் என்பதற்கு போதிய சான்று இல்லாத அதே சமயத்தில், கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தமிழத்திற்கு வந்திருக்கலாம் என்று துணியலாம்.
‘நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு, விளையாட்டு புத்தி, சிற்றின்ப நாட்டம் ஆகியவை இயல்பு’ என்ற ஜெயஸ்வாலின் கருத்து, சங்க இலக்கியத்தில் உள்ள கலித்தொகை- முல்லைக்கலி பாடல்களில் எதிரொளிப்பதைக் காணலாம்.

அடிக்குறிப்புகள்:

 1. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.14
 2. ஆர்.எஸ். சர்மா, பழங்கால இந்தியாவின் அரசியல் கொள்கைகள் சில தோற்றங்கள்,2010 ப.23.
 3. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.26.
 4. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், 1991, ப.104.
 5. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System, 1913. p.51.
 6. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.207.
 7. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.23
 8. மகாபாரதம், மௌசால பருவம்,  http://prramamurthy1931.blogspot.in/2013/01/mahabharata-mausala-parva.html/23-01-2014.
 9. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107.
 10. பி.வி.ஜகதீச ஐயர், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்,2009, ப.20 &165.
 11. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014.
 12. Sudhakar Chattopadhyaya, Evolution of Hindu Sects, 1970, p.72
 13. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
 14. மேலது, ப.107
 15. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014.
 16. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System,1913. p.52.
 17. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.105
 18. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.24.
 19. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.138.
 20. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.256.
 21. மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 2004, ப.45-47.
 22. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.29
 23. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.107.
 24. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.139.

தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு

 கடல்போல் தாளாண்மை மிக்க யாதவர் 

தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான்.
“ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ இனிதூழி – போத
மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு

திருக்கைமலர் தந்தான் சிறந்து”
தஞ்சாவூர் எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும்.

அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

கி.பி. 655ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.

இந்த விஜயநகர அரசின் ஆட்சிக்காலத்தில்தான் திருப்பதி கோவில் சீர்படுத்தப்பட்டது. எனவே தங்களை யாதவர்கள் என்று அழைத்துக்கொண்ட விஜயநகர அரசனைக் குறிக்கவே “தஞ்சை யாதவர்கோன்” என்ற பெயர் கையாளப்பட்டது.

ஔவையார்கள் என எத்தனைப் புலவர்கள் வாழ்ந்தார்கள்?ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. இப்பாடலை இயற்றியவர் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார்மேலும்

 இச்செய்யுளைப்பற்றிய இன்னொரு தகவல்.

இந்த யாதவர்களின் கடைசி அரசன் பெயர் ஓபள யாதவன். இவன் தஞ்சையின் அரசன் என்றும் சொல்லப் பெறுகிறான். காரணம் புரிபடவில்லை. (ஓபளனைப் பற்றிய கீழே வரும் இந்த வெண்பா இன்னிசை வெண்பாப்போல் தெரிகிறது. ஆனால் தளை எங்கோ இடிப்பது போலவும் தெரிகிறது. கல்வெட்டில் சிதைந்து காண்பதால் இங்கே ஒரு சீரும் குறைகிறது என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து)

வடதிசை யதுவே வான்தோய் இமையம் தென்திசை ஆய்க்குடி என்று தனது சங்கப்பாடல்களில் தெளிவான சான்றை கொடுத்துள்ளார் நறும்புல் மேய்ந்த கவரி என்பது இமயத்திலே வசிக்கும் மான் வகைகளைச் சார்ந்தது அதை மேற்கோள் காட்டி
உள்ளிர்கள்

வடதிசை யதுவே வான் யோய் இமையம் என்பது #யதுவே என்பது #மக்களை குறிக்கவில்லை ” வடதிசை இமையம்

இடத்தை குறிக்கிறது

                                                 முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!

ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல 5
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி

வடதிசையில் உள்ள இமயமலையில் கவரிமான்கள் வாழும். அவை நரந்தம் புல்லை மேய்ந்த பின், குவளை பூத்திருக்கும் குளத்து நீரைப் பருகி, தகர மரத்து நிழலில் உறங்கும். தென்திசையில் ஆய்-குடும்பம் இல்லை எனின் இமயமலையின் எடைப்பெருமையால் உலகம் பிறண்டுவிடும். இப்படிக் கூறுவது ஒருவகை மொழிநயம். வடதிசையில் உள்ள இமயமலையின் பெருமைக்கு ஈடாகத் திகழ்வது தென்திசையில் உள்ள ‘ஆய்’ மன்னின் குடிமரபு என்கிறது இந்தப் பாடல். இப்படிப்பட்ட ஆய் அரசனை முதலிலேயே பார்த்து என் ஙறுமையாப் போக்கிக்கொள்ளாமல் காலம் போன கடைசியில் பார்க்கிறேன “

அதனால் என் உள்ளம் மூழ்கி அழியட்டும். இப்போது பாடும் என் நாக்கு பிளந்துபோகட்டும். அவன் புகழைக் காலம் தாழ்ந்து கேட்கும் என் காது பாழ்ங்கிணறு போலத் தூர்ந்துபோகட்டும். இது தான் இந்த பாடல் விளக்கம்

#இடையர் விழுதுகள்

கோனார் கொற்றம்

முல்லை நிலம் தமிழர்கள்

                                                 

கோட்டை

கோட்டை


”இதை வைத்து அவன் என்ன கோட்டையா கட்டப்போறான் விடுப்பா” என்ற சொலவடையை கேட்டிருப்பீர். கோட்டை பின்புலமாக உள்ள பொருள் என்ன?

கோட்டை என்பது விதை, எல்லை, பாதுகாப்பான சுவர், அரண்மனை எனச்சொல்லுகிறது தமிழ் அகராதி. ”அப்படியானால் கோட்டையை விதைமுதலை வைத்தே கட்டினார்கள்’ என்பதைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
மதுரை அருகே உள்ள அழகர்கோயிலுக்கு இன்றும் அப்பகுதிசுற்றுவட்டார மக்கள் தங்களது தோட்டம், காடு, வயல்களில் விளைந்த தானியங்களை எடுத்துக்கொண்டு அழகருக்கு காணிக்கையாக செழுத்துகிறார்கள். அதன் பின்னர் அங்குள்ள தானியத்தில் சிறிதளவை எடுத்துக்கொண்டு வந்து அடுத்த ஆண்டு விளைவிக்க விதைதானியத்துடன் கலந்து ‘நல்லா விளைச்சலை கொடுக்கனுமிடா பெருமாளே’ என வணங்குகிறார்கள்.

மன்னர் காலத்தில் இப்பகுதியை சுற்றி இருந்த நிலங்கள் பெரும்பாலும் அழகர்கோவில் மானுவ நிலம். இதனால் விளைந்ததன் குத்தகை பங்கினை ஒப்படை பழக்கம் நாளிடவில் வளமை / பண்பாட்டு / நம்பிக்கைச் செயலாக மாறிவிட்டது என தொ.ப அவர்களின் பதிவையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.

கோட்டை கட்டுவது எப்படி


நெல் வைக்கோலில் பிரியாக விட்டு அதை பஞ்சாரம், பெட்டிகளுக்கு தூர் அமைப்பது போல் சுற்றிக்கட்டுகிறார்கள். இந்தப்பழக்கம் தற்போது மறைந்து விட்டதால் பைகளில் தானியங்களை எடுத்துச்சென்று காணிக்கை செழுத்துகிறார்கள்.

அழகர்கோயில் முகப்பு வாயில் ”கோட்டை வாசல்” என்ற பெயருடனே இன்றும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தமிழ் பிராமி எழுத்துக்களில் இப்பகுதியில் செல்லும் உப்பு வணிகர்கள் வரி விதித்த செய்தி உள்ளது. இது மன்னர் அசோகர் காலத்து எழுத்துக்கள் என்ற ஆய்வும் உள்ளது.

மேலூர், மதுரை மற்றும் இதரப் பகுதி மக்கள் வணிகர்கள் பழமுதிர்சோலை, நரியூத்து, கோம்பை வழியாக தவசிமடை போய் திண்டுக்கல்லிற்கும் நத்தம் பகுதிக்கும் போய்யுள்ளனர். பிரிட்டீஷ் ஆட்சியில் இப்பதை மூடப்பட்டது.

ஆயர்விழுதுகள்

இடையர்விழுதுகள்

கோனார்கொற்றம்

முல்லைநிலம்தமிழர்கள்

மதுரை அழகர் கோவில் மீனாட்சி

சமய ஒற்றுமையாக்கம்,

இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், #மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழையபுராணமாகும்.

இடையர் விழுதுகள்

முல்லை நிலம் தமிழர்கள்

ஆயர் விழுதுகள்

[வேப்பம் பூ மாலை

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகத்தில் வேப்பம் பூ மாலை அணிவிப்பது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும், சிலர் கவனித்தும் இருக்க மாட்டீர்கள், சிலர் அம்மன் தெய்வம் அதனால் வேப்பம் பூ என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அதில் பாண்டியர் வரலாறு உள்ளது.

பலவகை வாசனை மலர்கள் இருக்கும் போது மதுரை மகாராணிக்கு ஏன் வேப்பம் பூ அணிவிக்கிறார்கள். மதுரை என்பது பாண்டிய தேசம் அன்னை #தடாதகை பிராட்டியார் மலையத்துவச பாண்டியனின் மகளாக பிறந்தாள் என்பதை அறிவோம்.

பாண்டியர்களின் அடையாளம் #மீன் கொடி , #வேப்பம் பூ மாலை.பாண்டிய மன்னர்கள் வேப்பம் பூ மாலை தரித்தவர்கள் என சங்க கால நூல்கள் கூறுகின்றன.

எனவே தான் இன்றளவும் மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி #மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிந்து. தனது நாட்டு மக்களை காண திருவீதி உலா வருகிறாள்.

தேவி சரணம்.

முல்லைநிலைதமிழர்கள்

ஆயர் இடையர் கோனார்

மீனாட்சி என்பது ஒரு குறியீடு பச்சையம்மன் என்பது இயற்பெயர் உழவர்களின் தெய்வமாக மண்ணையும் விவசாயத்தையும் நம்பினர்.தங்களுக்கு படி அளக்கும் மண்ணை பெண்ணுடன் ஒப்பிட்டு அதை தெய்வமாக வழிபட தொடங்கினர்.

பின்னர் பாண்டியர்கள் தங்களது சின்னமான மீனை தங்கள் குலதெய்வமான பச்சையம்மனுடன் இணைத்து மீனாட்சி என புதிய பெயரை சூட்டினர்.

நாயக்கர் ஆட்சி காலகட்டத்தில் சைவ வைணவ இணைப்பிற்காக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் இணைத்து பெரும் விழாவாக மாற்றினர்.

எப்படி வேளாங்கண்ணி மாதா கோவிலும்,நாகூர் தர்காவும் சாதி,மதம் கடந்து பல்வேறு மக்களை இழுத்து வருகிறதோ அதே போல தான் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி திருக்கல்யாணமும்.

இன்றைக்கு புரட்சிகர ஹிப்பி வாழ்க்கை வாழும் ஆட்கள் நம்மிடையே பெருகி வருகின்றனர்.அவர்கள் வெகுசன மக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடி தன்னை முற்போக்கு ஆட்களாக காட்டி கொள்வதில் வெற்று பெருமை அடைகின்றனர்.

இவர்கள் எல்லாம் இப்படி பேசுவதன் மூலம் வெகுசன மக்கள் திரளை எளிதாக ஒரு பக்கமாக திரட்ட எளிமையாக உதவி விடுகின்றனர். இவர்களுடன் இந்த விவகாரத்தில் மாற்று மத சகோதர்கள் இணைந்து கொள்ளும் போது அது எளிமையான மடை மாற்றம் செய்யப்பட்டு கொதிநிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நம்மால் நல்லது நடக்கிறதோ இல்லையோ துயரத்தை ஏற்படுத்த கூடாது என்பது எளிமையான பழமொழி.

இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு இணங்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் சமூகத்தில் அமைதி நிலவும் இல்லை நாளொரு பஞ்சாயத்தும் கலவரமுமாக வாழ வேண்டியது தான்.

இடையர்விழுதுகள்

கோனார்கொற்றம்

முல்லைநிலம் தமிழர்கள்