புறநானூற்றில் ஆயர்கள் (குறிப்பு யது என்ற ஆரியச்சமூகத்திற்கும் இடையர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
தமிழில் இதுவரை இல்லாத ஒரு சொல் யது. ஆனால் இந்த சொல்லுக்கு எது என்ற ஒரு சொல்லை மட்டுமே குறிக்கும் தமிழில்.
சங்க இலக்கியமான புறநாற்றில் முல்லைநில மக்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள்
புறம் -05
“எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
விளக்கும் :- எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!
அதாவது கானகநாடன் என்பது முல்லைநில மக்களின் தலைவனை குறிக்கும்
காடும் காடு சார்ந்ததும் முல்லை நிலம் அகையால் கானகநாடன் என்கிற பெயரும் உண்டு
இங்கே கானக நாடன் என்பது சேரனை குறிக்கிறது,
சொற்பொருள்:-
எருமை – எருமை மாடுகள், அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே
புறநானூறு 5 பாடலில் கூறுகிறது,
புறம்-17
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா வீகைக் குடவர் கோவே.
விளக்கம்:- யானையின் மதநாற்றத்தை தேன் கொண்ட மலையெனக் கருதித் தங்கும் பெரிய பல யானைகளையும் மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால் கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது, நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய பாம்பின் தலை நடுங்க இடியைப் போல முழங்கும் முரசினையும் எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய குடவர் வேந்தே!
உடலுநர் உட்க வீங்கி – மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால்
கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது,
சொற்பொருள்:-
கடு ஒடுங்கு எயிற்ற – நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய
அரவுத் தலை பனிப்ப – பாம்பின் தலை நடுங்க
இடியென முழங்கு முரசின் – இடியைப் போல முழங்கும் முரசினையும்
வரையா ஈகை – எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய
குடவர் கோவே – குடவர் வேந்தே!
குடவர் என்றாலும் இடையரை தான் குறிக்கும்
இங்கே குடவர் என்று சேரனை தான் கூறிகிறார்கள்
புறநானூறு பாடல் 17
புறம் 54
இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.
விளக்கம் :- சீழ்க்கை(விசில்) அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.
சேரன் எதிரியின் நாட்டுக்கள் போகும் உவமைய கூறுகிறது,
சொற்பொருள்
மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய்
இடையன் – ஆயன்,
சிறுதலை ஆயம் = சிறிய தலையுடைய ஆடுகளின் கூட்டம்,. துஞ்சுதல் = தங்குதல்.
இடையனை பற்றி புறநானூறு 54 பாடலில் உள்ளது
புறம் 215 கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை
விளக்கம்:- பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும், தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, ஆயர்மகள் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்,
சொற்பொருள்:- கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் – பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோறு,
தாதெரு மறுகின் – தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில்,
போதொடு பொதுளிய – மலர்களுடன் தழைத்த,
மொட்டுக்களுடன் தழைத்த,
வேளை வெண் பூ – வேளையின் வெள்ளை மலர்கள்,
வெண் தயிர் கொளீஇ – வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை – இடைமகள் சமைத்த அழகிய புளிக்கூழ்,
அவரைக் கொய்யுநர் ஆர மாந்தும் – அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்,
புறநானூறு 215 பாடலில் ஆய் மகளை பற்றிய பாடல் உள்ளது,
புறம் – 221 பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;
விளக்கம்;- வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்; செங்கோல் உடைய ஆயனே!; சான்றோர் புகழ்ந்த நெருங…
[3:40 PM, 8/22/2020] சத்யபிரபு: மடம் = இளமை;
பால் = இயல்பு;
ஆய் = இடையர்;
வள் = வளம்;
உகிர் = நகம்.
உறை = பிரைமோர்
புறநானூறு 276 பாடலில் ஆயர் மகளீர் பற்றியும் பாடியுளனர்,
புறம்-331 கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்ஏர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக் குறிப்பின்
விளக்கம்:-இவன் கல்லையுடைத்துக் கட்டிய வலிய உவர்நீர் உள்ள கிணறும், வில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூருக்குத் தலைவன்; மிகுந்த வலிமையுடையவன். இவன் மிகவும் வறுமையுற்றால், குளிர் மிகுந்த, இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும் இடையன்,
புறநானூறு 331 பாடலில் இடையனை பற்றி உள்ளது,
புறம் -339 வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
விளக்கம் :-ஆனிரைகள் அகன்ற இடத்தில் புல்பூண்டுகளை உண்டி மரத்தடிநிழலில் அசையிட்டவாறே நின்றன. இடையர் முல்லைப் பூவை பறிக்க எறிந்த குறுங்கோலை கண்டு சிறிய முயல்கள் அஞ்சி அங்கே இருக்கும் நீர்நிலையில் வாளை மீன்களோடு துள்ளித் தாவி சென்ற
புறநானூறு 339 பாடலில் ஆயர்கள் பற்றியும்
புறம்-388
நசைசால் தோன்றல்,
எ. ஊழி வாழி, பூழியர் பெருமகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்,
விளக்கம்:-மனைப்பணியாளரும் களப்பணியாளரும் கனவென்று மயங்குமாறு நனவில் அளித்த அன்பு நிறைந்த தலைவன்; பூழியரின் தலைவன். சொரசொரப்புடைய துதிக்கையும் கொம்புமுடைய யானைகள் செய்யும் போரில் மேம்பட்ட வலிய முயற்சியுடைய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக்கூறிய அளவில்,
நசைசால் = விருப்பமிக்க
பூழியர் = இடையர்
மருப்பு = கொம்பு.
செரு = போர்.
பூழியர் என்று இந்த இடத்தில் பாண்டிய மன்னனை பாடியது பூழியர் என்றாலு இடையனை தான் குறிக்கும்
சங்க இலக்கியமான புறநாற்றில் ஆயர்களும் ஆயர்கள் வாழ்ந்ததை பற்றியும் உள்ள தொகுப்பு